• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நொய்யல் ஆற்றை அசுத்தப்படுத்தியதாக காருண்யா கல்லூரியின் கேட் முன்பு குப்பையை கொட்டிய கிராம மக்கள்

March 19, 2019 தண்டோரா குழு

நொய்யல் ஆற்றை அசுத்தப்படுத்துவதாக கூறி கோவை காருண்யா கல்லூரியின் கேட் முன்பு அந்தக் கிராமத்து இளைஞர்கள் குப்பை கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

நொய்யல் ஆறு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகிறது. இந்த நொய்யலாறு கோயமுத்தூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக பாய்ந்து காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இயற்கை அழகு பரவிக்கிடக்கும் பகுதி அது. இதே பகுதியில் காருண்யா பல்கலைக்கழகம் செய்யப்படுகிறது.இந்த கல்லூரியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் கொட்டப்பட்டு வருவதும் நொய்யல் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்வதும் போன்ற செயல்களில் காருண்யா பல்கலைக்கழகம் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இதையடுத்து குப்பைகளை காருண்யா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடத்தில் மூன்று ஆண்டாக கொட்டப்பட்டு வந்தது. ஆனால் தற்போது குப்பைகளை கொட்டுவதற்கு காருண்யா பல்கலைக்கழகம் திடீரென அனுமதி மறுத்துள்ளது. இதனால் மீண்டும் குப்பைகளை நொய்யல் ஆற்றில் கொட்டுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவாணி விழுதுகள் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சேகரித்த வைத்த சுமார் ஒரு டன் இடையுள்ள குப்பைகளை லாரியில் கொண்டு வந்து நேற்றிரவு காருண்யா கல்லூரியின் கேட்டின் முன்பு கொட்டிவிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து சிறுவாணி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த ராம்குமாரரிடம் கேட்ட போது,

காருண்யா பல்கலைக்கழகத்தைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நாள் ஒன்றுக்கு இரண்டு டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் நல்லூர் வயல் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் கொட்டப்பட்டது வந்தது. இதையடுத்து இந்த குப்பைகளை கொட்டுவதற்கு பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான தனியார் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டக குப்பை கொட்டப்பட்டு வந்தது.ஆனால் தற்போது அதற்கு காருண்யா தடை விதித்துள்ளது. இது குறித்து காருண்யா நிர்வாகத்திடம் கேட்ட போது குப்பையைப் பொறுத்தவரையில் கிராம மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தைதான் கேட்க வேண்டும் நீங்கள் கேட்க்க கூடாது என்று இளைஞர்களை அவமானப்படுத்தும் விதத்தில் நிர்வாகம் பதிலளித்துள்ளது. எனவே அப்பல்கலைக்கழத்துக்கு பதில் அடி கூடுக்கும் நோக்கத்திலே குப்பைகளை பல்கலைக்கழத்தின் முன்பு கொட்டினோம் என்றார்.

மேலும் படிக்க