• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நொய்யல் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்; விஷத்தன்மையை கலக்கும் விஷமிகள்

February 6, 2020 தண்டோரா குழு

நொய்யல் ஆற்றில் தொடர்ந்து சாயக்கழிவுகள் கலக்கப்படுவதால் மீன்கள் செத்து மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், வளமான பல்லுயிர்ச்சூழல் நிலவும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், சாடிவயல் என்ற பகுதியில் சிற்றோடைகள் இணைந்து நொய்யல் ஆறு உருவெடுக்கிறது. சமவெளிக்கு இறங்கும் நொய்யல் ஆறு, கிழக்கு நோக்கி கோவை, சூலூர், பல்லடம், மங்கலம், திருப்பூர், ஈரோடு – ஒரத்துப்பாளையம் அணை என 180 கிலோ மீட்டர் பயணித்து கரூர் அருகே நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் கரையோரத்தில் சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருவதாகவும், மழைக்காலங்களில் அங்கிருந்து சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீண்டகாலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் அவ்வப்போது நொய்யலில் நுரை பொங்கி செல்லும் நிலையும் ஏற்படுகிறது.

இந்த சூழலில், சாயக்கழிவுகள் கலப்பதால் நொய்யல் ஆற்றில் மீன்கள் செத்து மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவை நஞ்சுண்டாபுரம் தடுப்பணை பகுதியில் நொய்யல் நீரில் நச்சுத்தன்மை அதிகரித்ததால் மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்திற்கு வாழ்வாதாரமாக திகழ்ந்த நொய்யல் தற்போது கேட்பாறின்றி கிடைக்கிறது. அதே நேரத்தில், இது போன்ற விஷமிகளை களைய வேண்டிய மாடுக்கட்டுப்பாட்டு வாரியமும் மவுனம் சாதித்து வருகிறது.சாயப்பட்டறை எந்த பகுதியில் உள்ளது என்பதனை கண்டறிந்து, அதனை முழுமையாக மூட வேண்டும் என்று நஞ்சுண்டாபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க