• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீலசட்டை பேரணியில் பத்தாயிரம் பேர் பங்கேற்கின்றனர் – கு.இராமகிருட்டிணன் பேட்டி

January 31, 2020

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் நீலசட்டை பேரணியில் பத்தாயிரம் பேர் பங்கேற்கின்றனர். தபெதிக பொதுசெயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறியுள்ளார்.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் ஒன்பதாம் தேதி 150க்கும் மேற்பட்ட பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய முற்போக்கு அமைப்புகள் இணைந்து அம்பேத்கர் சாதி ஒழிப்பு நீலச்சட்டை பேரணியும் சாதி ஒழிப்பு மாநாடு வஉசி மைதானத்தில் நடைபெறுகிறது. அன்றைய தினம் கோவை விகேகே மேனன் சாலையிலிருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வழியாக வஉசி மைதானம் வரை செல்லும் இந்த பேரணியில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மைதானத்தில் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. தீண்டாமை அடக்குமுறை கல்வி வேலை வாய்ப்புகளை மறுத்தல், சாதிய ஒடுக்குமுறை சாதிய ஒடுக்குமுறை என அனைத்து ஒடுக்குமுறைகளை புறந்தள்ளப்பட்ட மக்கள் அதிகம் எனவும் இதன் முதற்படி முயற்சிதான் கருஞ்சட்டை பேரணி யும் தற்போதைய நீல சட்டை பேரணியும் நடத்தப்பட உள்ளதாக கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.

இதில் குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினரும் ராஷ்ட்ரிய தலித் அதிகார மன்ச் அமைப்பின் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெகல்கான்பாகவி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில பொதுசெயலாளர் அப்துல் ரஹ்மான், திரைப்பட நடிகர் சத்யராஜ், திரைப்பட இயக்குனர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், கருபழனியப்பன், மருத்துவர் ஷாலினி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். இந்தப் பேரணிக்கு மாநகர காவல்துறை காலம் தாழ்த்தி அதைத்தொடர்ந்து பெரியாரிய உணர்வாளர்கள் அமைப்பின் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது மாநாடு நடத்த தடையில்லை என நீதிமன்றம் அனுமதி அளித்ததாகவும் இதில் 150 அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தற்போது அவர் தெரிவித்தார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது வெண்மணி திராவிடர் தமிழர் கட்சி, ஆதி தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிகுமார், இளவேனில் தமிழ் புலிகள் கட்சி பொதுச்செயலாளர், நவீன் ஒருங்கிணைப்பாளர் தமிழர் விடியல் கட்சி, ஆறுச்சாமி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், தந்தை பெரியார் திராவிட கழக உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க