• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் காபி மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

December 13, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள எப்பநாடு பகுதியில் இந்த ஆண்டு காபி மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. உதகை மற்றும் குந்தா வட்டாரங்களில் மட்டும் காய்கறி விவசாயம் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் கூடலூர், பந்தலூர், உதகை, குன்னூர் மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் காபி பயிரிடப்படுகிறது. பெரும்பாபலான விவசாயிகள் தாங்கள் சொந்த உபயோகத்திற்காகவும், சிலர் விற்பனைக்காகவும் பயிரிடுகின்றனர். காபியை பொருத்தவரை அறுவடை காலம் அதிகம் என்பதால் இதனை பயிரிட விவசாயிகள் தயக்கம்காட்டி வருகின்றனர். காபி மகசூல் அதிகரித்தால் அதிக லாபம் கிடைக்கும்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் துவங்கி, நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர் மழை பெய்தது. இதனால், தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி மற்றும் காபி தோட்டங்கள் பசுமையாக மாறின.

இந்த மழை காரணமாக உதகை அருகேயுள்ள எப்பநாடு, சின்னக்குன்னூர் போன்ற பகுதிகளில் உள்ள காபி தோட்டங்களில் மகசூல் அதிகரித்துள்ளது. சிலர் தேயிலை பயிர்களுக்கு நடுவே ஊடு பயிராக காபி பயிரிடப்பட்டுள்ள நிலையில், தேயிலை மற்றும் காபி மகசூல் அதிகரித்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு பின் உதகை மட்டுமின்றி, நீலகிரி மாவட்டம் முழுக்க காபி விளைச்சல் இம்முறை அதிகரித்து காணப்படுகிறது. கிலோ ஒன்று ரூ.150 முதல் 200 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க