• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீலகிரியில் பள்ளிக்குழந்தைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு முதியவர்கள் கைது

September 12, 2019 தண்டோரா குழு

பந்தலுார் அருகே இரு குழந்தைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, 73 மற்றும் 62 வயதான இருவர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம்,பந்தலுார் அருகே உள்ள அரசு பள்ளியில்,5ம் வகுப்பு படித்து வந்த,இரண்டு குழந்தைகள் கடந்த மே மாதம் பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளனர்.அப்போது, வீட்டின் அருகே குடியிருக்கும் முதியவர்கள் இருவர்,மிட்டாய்,கடலை போன்றவற்றை வாங்கி கொடுத்து,அவர்களிடம் செல்லமாக பேசியுள்ளனர். பின்னர், அருகேயுள்ள புதர் பகுதிக்கு அடிக்கடி அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது’ என, குழந்தைகளை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன குழந்தைகள் இருவரும், வீட்டில் யாரிடமும் தகவலை தெரிவிக்கவில்லை.இந்நிலையில்,குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்,சோர்வடைந்த நிலையில் இருந்த குழந்தைகளிடம் விசாரித்ததில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து,பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் சம்மந்தப்பட்ட தாசய்யா,62, கிருஷ்ணன்,73,ஆகியோர் மீது’போக்சோ’சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் படிக்க