• Download mobile app
13 Aug 2026, ThursdayEdition - 3837
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதி விசாரணையை அறிவிக்காவிட்டால் அறப்போராட்டம் வெடிக்கும் – ஓ.பன்னீர் செல்வம்

March 4, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணையை மார்ச் 8-ம் தேதி மாலைக்குள் தமிழக அரசு அறிவிக்காவிட்டால் அறப்போராட்டம் வெடிக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது; “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்கள் மனதிலும் சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை போக்க வேண்டிய பொறுப்பு ‘நம்மிடம்’(ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்) உள்ளது.

75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் அவர் இருந்த போது அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விவரங்களை மக்கள் அறிய வேண்டும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை கோரி மார்ச் 8-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கிறோம். அன்று மாலை 5 மணிக்குள் தமிழக அரசு நீதிவிசாரனை குறித்து நல்ல முடிவு அறிவிக்காவிட்டால், தமிழகத்தில் அறப்போராட்டம் வெடிக்கும்.

முன்னதாக நான்(ஒ.பன்னீர்செல்வம்)ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் சிகிச்சைகள் தொடர்பான விவரங்களை கேட்டேன். அவர்கள் அளித்த தகவல்கள் என் மனதை சங்கடப்படுத்தின.

அதனால்தான், நீதி விசாரணை வேண்டும் என கேட்டேன். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லலாம் என கூறினேன். ஆனால் மறுத்துவிட்டார்கள். அ.தி.மு.க. ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிவிட அனுமதிக்க கூடாது”.

இவ்வாறு ஒ.பன்னீர்செல்வம் கூறினார்.

மேலும் படிக்க