• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

August 12, 2020 தண்டோரா குழு

தமிழகம் மற்றும்,புதுச்சேரியில் அனைத்து நீதிமன்றங்களையும் திறக்க வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா கால ஊரடங்கால் நாடு முழுவதும் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதில் நீதிமன்றங்களின் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் வழக்கறிஞர்கள் தொடர்ந்து நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்,அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் சத்தியசீலன் தலைமையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பாக வழக்கறிஞர்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் நீதிமன்றங்களை மீண்டும் திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கோசங்கள் எழுப்பினர்.

பின்னர் சத்தியசீலன் பேசுகையில்,

“கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூக இடைவெளியைப் பின்பற்றி அனைத்து தனியார் நிறுவனங்களும் செயல்படுகின்றன.அதன்படி சமூக இடைவெளியை பின்பற்றி நீதிமன்றங்களை நடத்த வேண்டும்., நலிவடைந்த வழக்கறிஞர்களுக்கு நிவாரண உதவி, எந்த நிபந்தனையும் இல்லாமல் ரூ.5 லட்சம் வங்கி கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க