• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எப். ஐ மாணவர்கள் கைது

June 8, 2019 தண்டோரா குழு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன்பாக கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அதில் மதிப்பெண் குறைந்த மாணவிகள் 3 பேர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தனர். இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று கோவை காந்தி புரம் பெரியார் படிப்பகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது கழுத்தில் தூக்கு கயிறை மாட்டிக்கொண்டு நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படாவிட்டால் மாணவர் தற்கொலை தொடரும் என கூறிய அவர்கள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதனையடுத்து அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 15 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மேலும் படிக்க