• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

September 12, 2020 தண்டோரா குழு

மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த, காவல் உதவி ஆய்வாளர் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசிப்பவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது 19 வயது மகளான ஜோதி துர்கா நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார். இவர் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி மதிப்பெண் குறைவாக பெற்ற நிலையில், இந்த ஆண்டிற்கான நீட் தேர்விற்கு படித்துகொண்டிருந்தபோது நேற்று இரவு தனது தந்தையிடம் தேர்வு குறித்து அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிகாலையில் தேநீர் வழங்குவதற்காக ஜோதியின் அறையை திறந்தபோது, அவர் மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க