• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீங்கள் சாதித்துவிட்டீர்கள் பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து !

May 23, 2019 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.

தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 348 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 90 இடங்களில் முன்னிலை. தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து, பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் மோடிக்கு ரஜினி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

மதிப்பிற்குரிய மோடிக்கு என இதயம் கனிந்த வாழ்த்துக்கள், நீங்கள் சாதித்துவிட்டீர்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க