• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நியூசிலாந்தில் அரியவகை மீன் கண்டுபிடிப்பு

July 25, 2017 தண்டோரா குழு

நியூசிலாந்து நாட்டின் கடற்பகுதியில் ‘சன்பிஷ்’ என்னும் புதுவகை மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடல் உயிரினங்கள் குறித்து சர்வதேச நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய பசிபிக் கடல்பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

அப்படி ஆய்வு செய்து வரும்போது, நியூசிலாந்து நாட்டின் கடற்பகுதியில் 13௦ ஆண்டுகளுக்கு முந்தைய ‘சன்பிஷ்’ என்னும் புதுவகை மீனை கண்டுப்பிடித்தனர். இந்த மீன் சுமார் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இதனுடைய எடை 2 டன். இந்த மீனை ‘எலும்பு மீன்’ என்றும் அழைப்பர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சுமார் 1௦ ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலிய கடல்பகுதியில், சன்பிஷ் மீன் குறித்து சில தடயங்களை ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த மீன் எப்படியிருக்கும் என்பது குறித்து ஆய்வாளர்களுக்கு சரியாக தெரியாததால், இந்த மீன் அவர்கள் கண்ணில் சிக்காமல் தப்பி சென்றுள்ளது.

இந்த சன்பிஷ் இன மீன்கள் யாருடைய கண்ணுக்கும் தென்படாமல் சுமார் 3 நூற்றாண்டுகள் மறைந்து வாழும் தன்மையுடையது. அதனால் தான் இந்த இன மீன்களுக்கு ‘மோலா டேக்டா’ என்று ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். ‘மோலா டேக்டா’ என்னும் லத்தின் பெயருக்கு ‘மாறுவேடமிடுவது அல்லது மறைந்து வாழ்வது’ என்று பொருள். குளுமையான கடல் நீர் பகுதியை இந்த இன மீன்கள் அதிகாமாக விரும்புவதால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் தென் அமெரிக்காவின் சிலி நாட்டின் தென் கடற்பகுதியில் இந்த மீன்கள் காணப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க