• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிம்மதியாக உறங்குவது எப்படி? தலாய் லாமாவிடம் ஸ்மித் கேள்வி

March 25, 2017 தண்டோரா குழு

தரம்சாலாவில் உள்ள ஆஸ்திரேலிய அணியினர் திபெத்திய பெளத்ததுறவி தலாய் லாமாவைச் சந்தித்து ஆசி பெற்றனர்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
ஹிமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியினர் திபெத்திய பெளத்த துறவி தலாய் லாமாவைச் வெள்ளியன்று சந்தித்தனர்.

இச்சந்திப்பு குறித்து கேப்டன் ஸ்மித் கூறும்போது,

“இது மிக அருமை. நான் அவரிடம் நிம்மதியான உறக்கம் பற்றியும் அதற்கு அவர் எப்படி எனக்கு உதவ முடியும் என்று கேட்டேன், அவர் என்னை ஆசீர்வதித்தார்.திபெத்திய கலாச்சாரத்தின் படி நானும் அவரும் ஒருவரையொருவர் மூக்கால் உரசிக் கொண்டோம், அவர் எனக்கு தன் ஆசிகளை வழங்கினார். இது எனக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கான நிம்மதியான உறக்கத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

மேலும், எங்கள் அனைவருக்குமே இது ஒரு அபூர்வ அனுபவமாக அமைந்தது, அவரிடமிருந்து ஏதாவது கற்றுக் கொள்ள முடியும் என்றால், கடினமான கிரிக்கெட் ஆட்டத்தில் நாங்கள் சில வேளைகளில் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்களாக மாறிவிடுவது தடுக்கப்படலாம். இவ்வாறு கூறினார் ஸ்மித்.

ஏற்கெனவே 2013-ல் இங்கிலாந்து தொடரின் போது தலாய்லாமாவை ஆஸ்திரேலிய அணியினர் சந்திக்க முயன்றனர் ஆனால் அப்போது முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க