• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிதி நிறுவன மோசடி; இழந்த தொகையை பெற்று தர கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் தீவிரம்

February 9, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் யுடிஎஸ் என்ற நிதி நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அவ்வாறு முதலீடு செய்தவர்களுக்கு முதல் சில வாரங்களுக்கு

வட்டித் தொகை வழங்கப்பட்டது. பின்னா் வட்டி தராமலும், டெபாசிட் செய்த தொகையைத் திரும்ப தராமலும் இழுத்தடித்துள்ளனர். இதையடுத்து இந்நிறுவனத்தின் பல கிளைகள் மூடப்பட்டன.இதைத் தொடர்ந்து கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

விசாரணையில் இந்நிறுவனத்தினர் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் பேரிடம் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்கு பல மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. மேலும் இந்நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இழந்த தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்நிறுவனத்தை சேர்ந்த ஒருவரின் ரூ.90 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த தொகையை செலுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க