• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி பொள்ளாச்சி விற்பனை பிரதிநிதி கைது

December 17, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் விவேகானந்தன் (31). இவர், பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள நிதி நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.இவர் இந்த நிறுவனத்தில் இருசக்கர வாகனங்கள்,4 சக்கர வாகனங்களுக்கு விற்பனை செய்யும் ஏஜென்ட் மூலம் மற்றும் தனி நபர்களுக்கு கடன் உதவி செய்து மாதந்தோறும் வசூலித்து வந்தார்.

இந்நிலையில்,கடந்த ஜூலை மாதம் 27ம் தேதியில் இருந்து விவேகானந்தன் திடீரென வேலைக்கு வராமல் தலைமறைவானார். அப்போது அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச்ஆப் என்று வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நிதி நிறுவனத்தினர் நிதி நிறுவன கணக்குகளை தணிக்கை செய்தனர். அப்போது நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சத்து 12 ஆயிரத்தை அவர் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நிதி நிறுவன இயக்குனர் ராம்குமார் உடனே இதுதொடர்பாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். இதில், கடந்த 15-7-2022 மற்றும் 27-7-2022 ஆகிய தேதிகளில் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சத்து 12 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து,விவேகானந்தன் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.தொடர்ந்து நேற்று அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

மேலும் படிக்க