• Download mobile app
09 Aug 2026, SundayEdition - 3833
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாயை தனித்துவமாக வைத்து தமிழில் உருவாகும் அட்வென்சர் படம்.!

March 22, 2018 தண்டோரா குழு

இந்திய திரையுலகில் இதுவரை பல விதமான படங்கள் வெளியாகி விட்டன. தமிழ் சினிமாவிலும் விலங்குகளை வைத்தும் நிறைய படங்கள் வெளிவந்துள்ளது.ஆனால் விலங்குகளை மையப்படுத்தி ஹாலிவுட்டில் மட்டுமே படங்கள் உருவாகி இருந்தன.

விலங்குகளை மையப்படுத்தி ஹாலிவுட்டில் மட்டுமே எடுக்கப்பட்ட படங்கள் இந்தியாவில் முதல் முறையாக தமிழில் ஒரு நாயை தனித்துவமாக வைத்து ஒரு படம் உருவாக உள்ளது. இப்படத்தை உறுமீன் படத்தை இயக்கிய  சக்திவேல் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார்.

ஒரு நாய்க்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் உறவையும் ஒருவருக்கொருவர் உதவி கொள்ளும் விதத்தையும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டும் இப்படம் உருவாகவுள்ளது.

காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ள இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியானது. இந்த படம் இந்திய திரையுலகில் புதிய மைல் கல்லை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,இப்படம்  குழந்தைகளை கவரும் விதத்தில் ஒரு அட்வென்சர் படமாக இருக்கும் என்றும் கூறுகிறப்படுகிறது.

 

மேலும் படிக்க