• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரே பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் – பி.சி.சாக்கோ

December 20, 2018 தண்டோரா குழு

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் முன்மொழிந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரே பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் என அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பி.சி.சாக்கோ தெரிவித்துள்ளார்.

கோவை ரயில்நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர்
பி.சி.சாக்கோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

ரபேல் விமானங்களை வாங்குவது தொடர்பாக விமானப்படை தலைவரின் கருத்து அவர் முழுமையான தகவலை அறியாததை காட்டுகிறது. ரபேல் போர் விமானம் வாங்கியதில் நாட்டிற்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டு கமிட்டி விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும் என்பது தான் காங்கிரசின் நிலைப்பாடு. உச்சநீதிமன்றமத்தின் தீர்ப்பு தவறான தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அரசு தவறான தகவல்களை வழங்கி உச்சநீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளது. மோடி சிறந்த பேச்சாளர் என்பதால் பேசி சமாளிக்கலாம், ஆனால் உண்மையில் நாட்டில் வளர்ச்சியை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி ஆட்சிதான் என்றார்.

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஸ்டாலின் முன் மொழிந்தது தொடர்பான கேள்விக்கு, பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரே காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும் எனவும், மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதே காங்கிரசின் இலக்கு எனவும் சாக்கோ தெரிவித்தார்.

மேலும் படிக்க