• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாசாவிற்கு ராக்கெட் அனுப்பிய சிறுவன்

August 22, 2017 தண்டோரா குழு

லண்டனை சேர்ந்த 5 வயது சிறுவன் ராக்கெட் ஒன்றை வரைந்து நாசாவிற்கு அனுப்பியிருந்த நிலையில் தற்போது நாசா,அவனுடைய கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த 5 வயது சிறுவன் இட்ரிஸ் ஹைல்டன் , தான் வரைந்து அனுப்பியிருக்கும் ராக்கெட் போன்ற ராக்கெட்டை உருவாக்க வேண்டும் என்றும் அந்த ராக்கெட்டை தானே விண்வெளிக்கு ஒட்டி செல்வதாகவும், தனக்கு விண்வெளி வீரர் உரிமத்தை தரவேண்டும் என்று அவனுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.

அவனுடைய கடிதத்தையும் அவன் வரைந்த ராக்கெட்டையும் கண்ட நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தின் பொறியாளர் கெவின் டிரூயின்

“உன்னுடைய ராக்கெட் வடிவம் மிகவும் அருமையாக இருந்தது. ராக்கெட்டை ஓட்டி செல்லும் விண்வெளி வீரர் ஆகுவதற்கு நீ எடுத்து வைக்கும் முதல் படி ஆகும். விண்வெளி வாகனம் மற்றும் கருவிகளை பயன்படுத்த கடின உழைப்பும் முழு அர்ப்பணிப்பும் தேவை. முதலில் நீ பள்ளியில் ஆர்வத்துடன் படிக்க வேண்டும். உன்னுடைய ஆர்வத்தாலும் கடின உழைப்பாலும், எதிர்காலத்தில் நாசாவில் சேர்ந்து பணி புரியலாம். உனக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்” என்று அந்த பதில் கடிதத்தில் எழுதியிருந்தார்.

முன்னதாக கிரகங்களை பாதுகாக்கும் அதிகாரி பணிக்கு விண்ணப்பித்த 4-ம் வகுப்பு பயிலும் 9 வயது ஜேக் டேவிஸ் என்ற சிறுவனுக்கு நாசாவின் கிரக ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் ஜேம்ஸ் எல். கிரீன் ரால், ஜக் டேவிஸின் உயர்வான எண்ணத்தையும், ஆர்வத்தையும் பாராட்டி ஒரு கடிதம் எழுதி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க