• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நல்லா சொல்லுறீங்கய்யா இட்லி கணக்கு – நடிகை கஸ்தூரி டுவீட் !

December 19, 2018 தண்டோரா குழு

அடேய் மலைமுழுங்கி அப்பலோடக்கருங்களா… நல்லா சொல்லுறீங்க கணக்கு” என்று ஜெயலலிதாவின் உணவு செலவை தந்த அப்போலோ நிர்வாகத்தை நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது தொடர்பான தகவல்களை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆறுமுக சாமி ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அனைத்திற்கும் ஆன செலவு பட்டியல் வெளியாகியுள்ளது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்துள்ளார்.

சிகிச்சை நாட்களில் ஜெயலலிதாவிற்கு உணவுக்காக மட்டும் ரூ.1.17 கோடி செலவாகியுள்ளதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, 2 இட்லிக்கு ரூ.1.17 கோடியா? என்றும், தெருக்கடையில இட்லி வாங்கிக் கொடுத்திருந்தால் 5 ஆயிரம் ரூபாய் கூட ஆகி இருக்காதே என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரியும் கோடிக்கணக்கில் கணக்கு காட்டியுள்ள அப்போலோ நிர்வாகத்தை தனது ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

அம்மா உணவகத்துல ஊருக்கே இட்லி ஒரு ரூபா

அப்பல்லோவுல அம்மாவுக்கே இட்லி ஒரு கோடி ரூபா.

அடேய் மலைமுழுங்கி அப்பலோடக்கருங்களா. நல்லா சொல்லுறீங்க கணக்கு ! என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க