• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விஷாலுக்கு திருமணம்

December 31, 2018 தண்டோரா குழு

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர் நடிகர் விஷால்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான இவர் நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டது.எனினும் இந்த செய்தியை வரலட்சுமி மறுத்தார். அதைப்போல் விஷாலும் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்ததும் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்திருந்தார்.

தற்போது சங்க கட்டிட வேலை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் கட்டிடம் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் விஷாலுக்கு அவரது பெற்றோர்கள் பெண் பார்த்துள்ளனர். அவரின் பெயர் அனிஷா. இவர் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரின் மகளாவார்.

விரைவில் ஐதராபாத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது. இதற்காக விஷால், குடும்பத்தினருடன் ஐதராபாத் செல்கிறார். நிச்சயதார்த்தத்தில் திருமண தேதியை முடிவு செய்கிறார்கள்.

மேலும் படிக்க