• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் வினுசக்ரவர்த்தி காலமானார்

April 27, 2017 தண்டோரா குழு

குணச்சித்திர நடிகர் வினுசக்ரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

குரு சிஷ்யன், அண்ணாமலை உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி (72). உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இவர் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று மூச்சடைப்பு காரணாமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாலை 7 மணியளவில் உயிரிழந்தார்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர மற்றும் வில்லன் வேடங்களிலுமே நடித்துள்ளார்.

மேலும், நடிகை சில்க் சுமிதாவை வண்டி சக்கரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவர் ரஜினி கமல் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு இணையாக நடித்து பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

சில்க் சுமிதா வாழ்க்கை வரலாறை சொல்லும் படமான தி டர்ட்டி பிக்சர்சில் சில்க் ஸ்மிதாவை தொலைக்காட்சி, திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சித்தரித்த விதத்தை இவர் கடுமையாக விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க