• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மாயம் – மனைவி போலீசில் புகார்

December 7, 2018 தண்டோரா குழு

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். இதற்கிடையில், சொத்து பிரச்சனை காரணமாக நடிகர் பவர் ஸ்டார் ஊட்டியில் உள்ள தனது நிலத்தை விற்பதற்காக வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சென்றுள்ளார். இதையடுத்து, அவரது மனைவி ஜுலி தனது கணவரை காணவில்லை என சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரில், நண்பரை பார்க்க சென்ற நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வீடு திரும்பவில்லை.பவர் ஸ்டாரின் சொத்துக்களை தங்கள் பெயருக்கு எழுதிவைக்க வேண்டும் என மர்ம நபர்கள் செல்போனில் தன்னை மிரட்மியதாகவும் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறும் ஜூலி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சொத்துப்பிரச்சனை தொடர்பாக ஊட்டியில் இருப்பதாக பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவரது மனைவியிடம் போலீசார் பேசினர்.

அப்போது அவர் எனது கணவர் ”காணமால் போய்விட்டாரோ என்ற நினைப்பில் புகார் கொடுத்துவிட்டேன்” என்று கூலாக பதில் சொல்லியுள்ளார்.

இதற்கிடையே, நேற்று காலையில் வீட்டில் உள்ளவர்களுக்கு போன் செய்து பவர் ஸ்டார் பேசியுள்ளார். அதன்பின்பு அவரது மனைவி ஜூலி ஊட்டிக்கு சென்று கணவரை சந்திதுள்ளார்.

மேலும் படிக்க