நடிகர் சங்க கட்டிட விவகாரத்தில் தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக விஷால் அணியின் தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டப்பட இருக்கிறது. இதற்கான பூமி பூஜை விழாவில் நடிகர் ரஜினி, கமல் மற்றும் பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில்,கட்டிடம் கட்ட வேலைகள் தொடங்கிய நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நடிகர் சங்க கட்டிடம் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து உயர்நீதிமன்றம் சங்க கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை விதித்தது. இதனால் நடிகர் சங்க கட்டிட வேலைகள் செய்யாமல் தடையில் இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரனைக்கு வந்த போது நடிகர் சங்கம் சார்பாக விஷால் அணியினர் நடிகர் சங்க கட்டிடம் கட்ட எந்த இடத்தையும் ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என தங்கள் தரப்பு விளக்கத்தை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கட்டிடம் கட்ட விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டது. கட்டிடம் கட்ட தடை நீங்கியதால் விஷால் தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது