• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் கிரேஸி மோகன் காலமானார்

June 10, 2019 தண்டோரா குழு

பிரபல நாடக நடிகரும், தமிழ் சினிமா வசன கர்த்தாவுமான கிரேசி மோகன் உடல்நலக்குறைவால் காலமானார்.

1979-ல் கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவை தொடங்கி பல காமெடி நாடகங்களை அரங்கேற்றினார்.

டைமிங் காமெடி வசனங்களை எழுதுவதில் கைதேர்ந்தவர், கிரேஸி மோகன். இவர் முதன் முதலில் பாலசந்தர் இயக்கிய ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்துக்கு வசனம் எழுதினார்.பின்னர் கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார். வசனகர்த்தாவாகப் பணியாற்றிய அதே சமயம் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றியிருக்கிறார்.

இந்நிலையில்,இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு ‘கிரேசி’ மோகன் காவேரி மருத்துவமனையில் அனுமதி. கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம்2 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

மேலும் படிக்க