• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாத போலீஸ் மீது அவமதிப்பு வழக்கு

June 5, 2018 தண்டோரா குழு

நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாத போலீஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையார்களை அவதூறாக விமர்சித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில் பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்த விவகாரத்தில், 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கைது நடவடிக்கைக்கு அஞ்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. அதைபோல் உச்சநீதிமன்றமும் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாத போலீஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் மீது செய்தியாளர் முரளிகிருஷ்ணா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் படிக்க