தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளார்கள் என்று அதிமுக(அம்மா) துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுக் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
“ஒன்றரை கோடி தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளார்கள். இது நேற்று மதுரை மேலூரில் நடைபெற்ற கூட்டத்தின் மூலம் உறுதியாகி உள்ளது. தமிழக அமைச்சர்களும், மற்றவர்களும் திருந்தி வரவேண்டும் இல்லையென்றால் திருத்தப்படுவார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி அடையும் வரை எங்களுக்கு ஓய்வில்லை. நாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி,” என்றார்.
முன்னதாக டி.டி.வி. தினகரன் மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை நேற்று பிரமாண்டமாக நடத்தினார். பல லட்சம் தொண்டர்கள் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்