• Download mobile app
17 Feb 2026, TuesdayEdition - 3660
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்

December 3, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பல்லடம் பகுதியில் பகுதியில் வசிக்கும் முத்து ஜெயந்தி (46) என்பவர் கடந்த 14.11.2024 அன்று பொள்ளாச்சியில் நடைபெறும் உறவினர் திருமணத்திற்காக பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி பார்த்தபோது அவரது பையிலிருந்த சுமார் 14 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்து, மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் நெகமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்படி திருட்டு வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், புலன்விசாரணை செய்து வந்த நிலையில், இன்று (03.12.2024) தனிப்படையினர் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கனகராஜ் (45) மற்றும் பழனிச்சாமி மகன் ராமலிங்கம் (37) ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி திருட்டு வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதன் பேரில்,கனகராஜ் (45) மற்றும் ராமலிங்கம் (37) ஆகியோர்களை கைது செய்தும்,மேலும் மேற்படி நபர்கள் பொள்ளாச்சி கிழக்கு, பொள்ளாச்சி மேற்கு மற்றும் மகாலிங்கபுரம் காவல் நிலைய பகுதிகளில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் அவர்களிடமிருந்து மேற்படி வழக்குகளின் செத்துக்களான சுமார் 28 ½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 50,000/- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் , மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

மேலும் படிக்க