• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேவையான நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்–டிடிவி தினகரன்

August 2, 2017 தண்டோரா குழு

தேவையான நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும் என அதிமுக துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலாவை, டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிம் பேசிய அவர்,

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடாளுமன்றம் தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெற பாடுபடுவேன்.சுற்றுப்பயணத்தின் போது நடைபெறும் பொதுக்கூட்டங்களில் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசுவேன்.

கட்சி பணிக்காக தலைமைகழகம் சென்று பணியாற்றுவேன்.அமைச்சர் ஜெயக்குமார் கேள்விகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை.அமைச்சர்களுக்கு ஏதோ ஒருவித பயத்தால் பேசி வருகிறார்கள்.துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் என்னை கட்டுப்படுத்தயிருக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

தேவையான நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். சசிகலாவுக்கு எந்த சலுகைகளும்வழங்கப்படவில்லை.சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா மீது அவதூறு வழக்கு தொடரப்படும்.கமலஹாஷன் அரசியலுக்கு வருவது என்பது அவரின் சொந்த விஷயம்.அரசியலுக்கு யார் வருவதையும், யாரும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க