• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 18-ம் தேதி பொது விடுமுறை – தமிழக அரசு

March 27, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், 2-ம் கட்டமாக ஏப்.18-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதைபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

இதையடுத்து, நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து, அம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழக அரசியல் கட்சிகள் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் இரண்டுக்கும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது.

மேலும் படிக்க