• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் அரசியல் பேச வரவில்லை – மு.க.ஸ்டாலின்

February 22, 2019 தண்டோரா குழு

தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் அரசியல் பேச வரவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக – பாஜக- பாமக இடையே கூட்டணி உறுதியானது. அதைப்போல் நேற்று திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.

தேமுதிகவை அதிமுக கூட்டணி இழுக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையில், அண்மையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்தை அரசியல் கட்சி தலைவர்களும் , திரையுலக பிரபலங்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து, இன்று நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் , திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,

விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்க அவரை நேரில் சந்தித்தேன். அரசியல் குறித்து பேச வரவில்லை, மனிதாபிமான உணர்வுடன் தான் சந்தித்தேன்.விஜயகாந்த் நல்ல முறையில் தேறி வந்துள்ளார்.

மரியாதையுடன் அண்ணன் என்று அழைக்கக் கூடியவர் விஜயகாந்த். கருணாநிதி மீது பக்தி கொண்டவர். கருணாநிதி மறைந்தபோது விஜயகாந்த் வெளிாட்டில் இருந்தார். தாங்க முடியாமல் அவர் அழுத காட்சி இன்றைக்கும் மறக்க முடியாது. நாடு திரும்பியதும் நேரடியாக கலைஞர் நினைவிடம் சென்று அழுத காட்சி மறக்க முடியாதது. இன்னும் ஆரோக்கியமாக அவர் திகழ வேண்டும் என்று அவரிடம் தெரிவித்துக் கொண்டேன் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க