• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

February 22, 2019 தண்டோரா குழு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக – பாஜக- பாமக இடையே கூட்டணி உறுதியானது. அதைப்போல் நேற்று திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.

இதற்கிடையில் , தேமுதிகவை அதிமுக கூட்டணி இழுக்க முயற்சி செய்து வருகிறது. அண்மையில் தமிழகம் வந்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, அவர் விஜயகாந்தை நலம் விசாரிப்பதற்காகவே வந்ததாக அவர் கூறினார். எனினும் தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதற்கிடையில், நேற்று தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை நேரில் சந்தித்தார்.இந்நிலையில், இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

மேலும் படிக்க