• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய தலைவர்களை நினைவு கூறும் விதமாக அவர்களை போல வேடமணிந்தபடி ஊர்வலம்

October 29, 2020 தண்டோரா குழு

கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற காந்திய மக்கள் யாத்திரையில் மகாத்மா,பாரதியார் போன்ற தேசிய தலைவர்களை நினைவு கூறும் விதமாக அவர்களை போல வேடமணிந்தபடி ஊர்வலமாக சென்றனர்.

காந்திய சிந்தனையை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக கடந்த 18 ம்தேதி காந்திய மக்கள் யாத்திரை துவங்கியது. ஒவ்வொரு நாளும் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டுகளில் நடைபெற்று வரும் இதில் காந்திய சிந்தனைகளைப் பரப்பும் விதமாக பாடல்கள்,சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இந்நிலையில் 25 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட தெப்பகுளம் மைதானத்தில் இருந்து துவங்கிய காந்திய மக்கள் யாத்திரையை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சஞ்சய்தத் துவக்கி வைத்தார்.இதில் மகாத்மா, பாரதியார் போன்ற தேசிய தலைவர்களின் வேடமணிந்தவர்கள் ஊர்வலமாக சென்றனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இதில், தேசிய உணர்வூட்டும் நாட்டுபற்று பாடல்கள் பாடி,காந்திய சிந்தனைகள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மேலும் படிக்க