• Download mobile app
03 Oct 2026, SaturdayEdition - 3888
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவிலான ரோல் பால் விளையாட்டு போட்டிகள் கோவை வீராங்கனைகள் சாதனை!

November 21, 2018 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தில் தேசிய அளவிலான ரோல் பால் விளையாட்டு போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் சார்பில் கோவையை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 11 வயதிற்குட்பட்ட பிரிவில் கோவையை சேர்ந்த மகளிர் அணி தங்கப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்து உள்ளது. அதே போல ஆடவர் அணியினர் வெண்கலப்பதக்கத்தை பெற்று உள்ளனர்.மேலும் நான்கு வீரர்கள், மூன்று நாள் தொடர்ந்து ரோல் பால் விளையாட்டில் பங்கேற்று கின்னஸ் சாதனை முயற்சியிலும் ஈடுபட்டனர். இதிலும் வெற்றியை பெற்று உள்ளனர்.

இந்நிலையில் கோவை திரும்பிய இவர்களுக்கு கோவையில் உள்ள ரோல் பால் விளையாட்டு சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரோல் பால் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் அனைவரும் கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரோல் பால் சங்கத்தினர், வீரர் வீராங்கனைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க