• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூர்தர்ஷன் புதிய லோகோவை வடிவமைப்பவர்க்கு 1 லட்சம் பரிசு!

July 26, 2017 தண்டோரா குழு

தூர்தர்ஷன் தொலைக்காட்சி அதன் லோகோவை மாற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி சிறந்த லோகோ டிசைனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்றும் தூர்தர்ஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 58 ஆண்டுகளாக இருக்கும் டிடி எனப்படும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் நாடு முழுவதும் 23 சேனல்களை ஒளிபரப்பி வருகிறது. ஆரம்ப காலத்தில் அனைவராலும் கவரப்பட்ட இந்த சேனலின் பார்வையாளர்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர்.

இதனால் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் தூர்தர்ஷன் புது பொலிவுடன் வெளிவரவுள்ளது. இதனால் தனது லோகோவை மாற்ற தூதர்ஷன் திட்டமிட்டுள்ளது. இதற்காக இளைய தலைமுறையினருடன் தூர்தர்ஷனை இணைக்கும் முயற்சியாக புதிய சின்ன வடிவமைப்புப் போட்டியை அறிவித்துள்ளது. அதன்படி சிறந்த லோகோ டிசைனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்றும் தூர்தர்ஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், புதிதாக வடிவமைக்கப்பட்டு லோகோவை வரும் ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க