• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் – ஜி.கே.வாசன்

May 25, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் எனவும்,இதற்கு மாநிலஅரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

“தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் எனவும் காலம் தாழ்த்தமல் மத்திய,மாநில அரசுகள் அந்த ஆலையைக் மூட வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைக் மூட வேண்டும் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட பிரச்சினை எனவும் அங்கு இயல்பு நிலை திரும்ப தேவையான நடவடிக்கைகளைக் அரசு எடுக்க வேண்டும். தூத்துக்குடி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருவதாகவும் பொதுமக்களின் நியமான கோரிக்கைகளைக் நிறைவேற்ற கூடிய அரசுகள் இனி வருங்காலத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையைக் மூட அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மக்களின் மன நிலையைக் புரிந்து கொள்ள முடியாத அரசாக, இந்த அரசு விளங்குகிறது.தூத்துக்குடி ஆலையைக் மூடுவதற்கு தேவையான விழிப்புணர்வு பணியைக் தமிழ் மாநில அரசு மேற்கொள்ளும்.

மேலும் பெட்ரோல் ,டீசல் விலை வரலாற்று இல்லாத அளவில் உயர்ந்திருக்கிறது.அதற்கான முழு பொறுப்பைக் மத்திய அரசு ஏற்க வேண்டும்.அதே போல் அதற்கான கலால் வரியைக் குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெட்ரோல் ,டீசல் விலையைக் ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வர வேண்டும்”.இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க