• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துளிகூட அரசியல் கிடையாது! -கேப்டன் நலமுடன் இருக்கிறார் – ரஜினி

February 22, 2019 தண்டோரா குழு

விஜயகாந்துடனான சந்திப்பில் துளியும் அரசியல் கிடையாது நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக – பாஜக- பாமக இடையே கூட்டணி உறுதியானது. அதைப்போல் நேற்று திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.

இதற்கிடையில் , தேமுதிகவை அதிமுக கூட்டணி இழுக்க முயற்சி செய்து வருகிறது, நேற்று தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை நேரில் சந்தித்தார். இந்நிலையில், இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்து விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நண்பர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை. சிகிச்சைக்கு பின் நான் சிங்கப்பூரில் இருந்து வந்தபின் முதல் ஆளாக என்னை வந்து சந்தித்தவர் விஜயகாந்த்; அவர் சிகிச்சைக்கு பின் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் நான் அவர் உடல்நலம் விசாரிக்க வந்தேன். அவர் எப்போதும் நலமுடன் இருக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன் என்றார்.

அப்போது செய்தியாளர்கள் உங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்று ரஜினிகாந்த்திடம் கேள்வி எழுப்பினர். “என்னுடைய அரசியல் நிலை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். இப்போது பேசத் தயாராக இல்லை” இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மேலும் படிக்க