• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துரைமுருகன் வீட்டில் சோதனை: தேர்தல் ஆணையத்திற்கு வருமான வரித்துறை அறிக்கை!

April 3, 2019 தண்டோரா குழு

திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரிகள், துரை முருகனின் நண்பரின் சிமெண்ட் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இன்ஹ்ட சோதனையில் கட்டு கட்டாக பணம், ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை அறிக்கைக்குப் பின் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த அறிக்கையை, தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை அனுப்பி வைத்துள்ளது. எனினும் இந்த அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க