• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் சாதனை

April 11, 2025 தண்டோரா குழு

வருவாய் கோட்டாட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டது.

இந்த தேர்வு எழுத 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் அனுமிதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் என 3 கட்டமாக தேர்வு நடந்தது. கடந்த 3 நாட்களாக நடந்த நேர்முகத் தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. 190 பேர் பங்கேற்ற இந்த தேர்வில், 189 பேரின் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் கூடிய தேர்வர்களின் தற்காலிக மதிப்பெண் தரவரிசைப் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி கோவை கிளை தலைவர் திரு.அருண் செந்தில்நாதன் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 1 (துணை கலெக்டர் பணிகள்) நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அளவில் மொத்தம் 190 தேர்வர்கள் நேர்முகத் தேர்வில் பங்கு பெற்றனர்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற 121 மாணவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கு பெற்றனர். இத்தேர்வில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 90 பேரில் 47 பேர் இந்த அகாடமியின் மாணவர்களாக உள்ளனர். இது தமிழக அளவிலான மொத்த தேர்ச்சி விகிதத்தில் 50% சதவீதத்திற்கும் மேலாகும். குறிப்பாக, முதல் 10 ரேங்க்களில் 5 இடங்களை இவர்கள் பிடித்துள்ளனர். கோவை கிளை மாணவர்களான லார்சன் இஸ்ரேல் (7வது ரேங்க்), மது வர்ஷினி (11வது ரேங்க்), ஹர்ஷா உண்ணி (13வது ரேங்க்) ஆகியோரின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவை.இதில் முதல் ரேங்கை கதிர் செல்வியும், 3 வது ரேங்கை ஹரி பிரியங்கா பெற்றுள்ளனர்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாகம் தங்கள் மாணவர்களின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. அடுத்த குரூப்-1 & 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 14 முதல் கோவை கிளையில் தொடங்க உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 7305951898,9840702761 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

“தேர்வு தயாரிப்புக்கான சிறந்த வழிகாட்டியாக நாங்கள் தொடர்ந்து உள்ளோம்” என்று அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க