• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துடியலூர் காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று

July 12, 2020 தண்டோரா குழு

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு துடியலூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த 31 காவலர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு பெண் காவலர் உள்ளிட்ட 5 பேருக்கு இன்று காலை கொரானா தொற்று உறுதியானது.இதைத்தொடர்ந்து தொற்று ஏற்பட்ட 5 காவலர்களும் தற்போது கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.காவல் நிலையத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

துடியலூர் காவல் நிலையம் மூடப்பட்டு தற்காலிகமாக காவல் நிலையம்
அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு மாற்றப்படுகின்றது.இதையடுத்து மீண்டும் காவல்நிலையத்தில் உள்ள அனைவருக்கும் கொரானா பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளது.இன்னும் 10 காவலர்களின் முடிவுகள் வரவேண்டியுள்ளதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் தொற்று உறுதியான காவலர்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டறியும் பணி நடைபெறுகிறது.ஒரே காவல்நிலையத்தில் பணிபுரியும் 5 காவலர்களுக்கு கொரானா தொற்று உறுதியானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க