August 8, 2017
தண்டோரா குழு
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மண்ணடியை சேர்ந்தவர் லியாகத் அலி. இவரது வங்கி கணக்கில் ரூ.8 கோடி பணம் இருந்ததை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடந்த மார்ச் மாதம் இது தொடர்பாக லியாகத் அலியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர் போலியாக பல்வேறு நிறுவனங்களை தொடங்கி அதன் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்ததாக கணக்கு காட்டி ரூ.80 கோடி ஹவாலா பணத்தை ஹாங்காங்கிற்கு அனுப்பி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.இந்த விசாரணையின் போது,தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.