• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமுருகன்காந்தி மீது மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2017 தண்டோரா குழு

குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தை சார்ந்த திருமுருகன்காந்தி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டு போரின் போது தமிழர்கள் மிக கொடூரமாக கொல்லப்பட்டதை நினைவுப்படுத்தும் விதமாக கடந்த 21-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி மே-17 இயக்கம் சார்பாக நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தை மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி நடத்தினார். சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருப்பதால் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமுருகன்காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் புழல் சிறையில் உள்ள திருமுருகன் காந்தி தேனாம்பேட்டை ஐ.ஒ.சி அலுவலகத்தில் கல் வீசியது தொடர்பாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க