• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமணத்தை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் – சட்ட குழு பரிந்துரை

July 5, 2017 தண்டோரா குழு

இந்தியாவில் திருமணத்தை பதிவு செய்ய ஆதாரை எண்னை கட்டாயமாக்க சட்ட குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சவுகான் தலைமையிலான குழு தனது அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் தாக்கல் செய்துள்ளது.

அதில், திருமணத்தை ஆதாருடன் இணைப்பதற்கு உரிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். இதன் மூலம் மோசடி திருமணங்களை தடுக்கலாம்.திருமணத்தை பதிவு செய்யும் போது ஆதாரை கட்டாயமாக்குவதன் மூலம், பல ஆவணங்களை ஒரே நேரத்தில் தேட முடியும். திருமணம் பதிவு செய்வதை கால தாமதம் செய்தால் ஒவ்வொரு நாளுக்கும், அபராதம் விதிக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ.100 வரை வசூலிக்கலாம்.

மேலும், பிறப்பு, இறப்பு பதிவையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுக்கு மத்திய அரசு தனி இணையதளத்தை உருவாக்க வேண்டும். திருமண பதிவுக்கு ஆதார் கட்டாயமாக்குவதன் மூலம், பெண்கள் ஏமாற்றப்படுவதை தடுக்க முடியும் எனக்கூறியுள்ளது.

மேலும் படிக்க