• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் அருகே 2 குழந்தைகளை கொன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தாய்

July 13, 2018 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் அருகே பூமலூர் முன்னாள் ஊராட்சித்தலைவரும் திமுக பிரமுகருமான செந்திலின் மனைவி சிவரஞ்சனி.இவருக்கு 5 வயதில் அர்ஷத் என்ற மகனும் அர்ஷிதா என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் சிவரஞ்சனிக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.இதனால் விரக்தியடைந்த சிவரஞ்சனி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

அப்போது தனக்கு பிறகு தனது குழந்தைகள் தவிக்க கூடாது என்று எண்ணி சிவரஞ்சனி வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் இரண்டு குழந்தைகளையும் அமுக்கி கொன்றுள்ளார்.பின்னர்,வீட்டில் இருந்து மண்ணெண்ணெயை ஊற்றி தானும் தீ வைத்து கொளுத்திக் கொண்டார்.இதில் சிவரஞ்சனி உடல் முழுவதும் கருகிய நிலையில் பலத்த காயமடைந்தார்.

அதிகாலை நடந்த இச்சம்பவத்தில் தீக்காயங்களுடன் சிவரஞ்சனி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க