• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு – ஆம்புலன்ஸ் உதவியாளர் மரணம்

June 24, 2020 தண்டோரா குழு

22 வயதான ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (22). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி அவிநாசிபாளையம் 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.கடந்த 15-ம் தேதி இவர் சொந்த ஊர் சென்று வந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டார். இதையடுத்து,இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அதில் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து இவர் கடந்த 18-ம் தேதி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து ஒரு வார காலமாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இளம் வயது ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க