• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருநங்கை பிரித்திகா யாசினி தர்மபுரியில் பணியமர்த்தப்பட உள்ளார்

April 1, 2017 தண்டோரா குழு

சேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினி காவல்துறை துணை ஆய்வாளராக தர்மபுரியில் பணி அமர்த்தப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை துணை ஆய்வாளராக சேலத்தை சேர்ந்த பிரித்தியா யாசினி கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

சுமார் ஒரு ஆண்டு காலமாக அவர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று( மார்ச் 31) பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

நிறைவு விழாவில் அவர் பேசுகையில் “ காவலர்கள் பொதுமக்களுடன் அக்கறையாக நடந்து கொள்ள வேண்டும்” என பயிற்சி பெற்ற காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

திருநங்கையான பிரித்திகா யாசினி தர்மபுரியில் பணி அமர்த்தப்பட உள்ளார் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க