• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகளுக்கு பிரியாணி வழங்கிய சூர்யா ரசிகர்கள்

July 25, 2020 தண்டோரா குழு

நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.45 நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதல் நிகழ்ச்சியாக கோவை வடக்கு நகர தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக மாவட்ட தலைவர் சுனில் தலைமையில் திருநங்கைகளுக்கு அசைவ உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் பொங்கியம்மா நகர் பகுதியில் நடைபெற்ற இதில் மாவட்ட நிர்வாகிகள் அஜ்ஜு மற்றும் வடிவேல் மற்றும் வடக்கு நகர தலைவர் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து நலிவுற்ற நடைபாதை வியாபாரிக்கு பழக்கடை மற்றும் சாலையோரம் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்க உள்ளதாகவும்,பிறந்த நாள் நிகழ்வாக இனி வரும் தொடர்ந்து மூன்று மாதங்கள் இது போன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக மாவட்ட தலைவர் சுனில் தெரிவித்தார்.

மேலும் படிக்க