• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் காலமானார்

March 26, 2019 தண்டோரா குழு

தமிழக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் 1944 மே5ம் தேதி பிறந்தவர் செல்வராஜ். இன்ஜினியரான இவர் 1987 முதல் 1993வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தார். இவர் 1980–84 ஆண்டுகளில் திருச்சி தொகுதி திமுக எம்பியாக இருந்தார். மதிமுக ஆரம்பிக்கப்பட்ட போது அக்கட்சிக்கு சென்ற திமுக மாவட்ட செயலாளர்களில் செல்வராஜூம் ஒருவர்.

பின்னர் திமுகவில் சேர்ந்த அவர் 2006 ஆண்டு முசிறி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார்.இதற்கிடையில், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட செல்வராஜுக்கு வாய்ப்பு கிடைக்காததால்அதிருப்தியடைந்த செல்வராஜ்,ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.

இந்நிலையில் 75 வயதான செல்வராஜ் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

மேலும் படிக்க