• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெயரியசாமி காலமானார்

May 26, 2017 தண்டோரா குழு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி உடல் நலக்குறைவால் காலமானார்.

திமுக தலைவர் கருணாநிதியால் முரட்டு பக்தன் என்று அழைக்கப்பட்டவர் தென் மாவட்ட திமுகவின் முக்கிய அரசியல்வாதியான தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி.அவருக்கு வயது 78.

உடல் நலக்குறைவால் அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

30 ஆண்டுகளாக திமுக மாவட்ட செயலாளராக இருந்த என். பெரியசாமி 1986 ஆம் ஆண்டு நகராட்சி தலைவராகவும் 1989, 1996 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாகவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது என்.பெரியசாமியின் மகள் கீதா ஜீவன் எம்.எல்.ஏவாக உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடத்தைச்சேர்ந்த பெரியசாமி நெருக்கடி நிலையின் போது மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க