• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக சார்பில், 21 வது வார்டு பகுதியில், போட்டியிடும் பூங்கொடி சோமசுந்தரம் மனு தாக்கல்

February 4, 2022 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி பகுதியில் திமுக சார்பில், 21 வது வார்டு பகுதியில், போட்டியிடும் பூங்கொடி சோமசுந்தரம் மனு தாக்கல் செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வந்தனர். தொடர்ந்து கோவை மாநகராட்சி பகுதியில் 100வார்டுகளுக்கும் தனி தனியாக கட்சி நிர்வாகிகளும்,சுயேட்சையாகவும் போட்டியெடுகின்றன.அந்த வகையில்
கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் இன்று கோவை சரவணம்பட்டி,21 வது வார்டில், போட்டியிடும் திமுக வேட்பாளர் பூங்கொடி சோமசுந்தரம்,வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

15 ஆண்டுகளாக கட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றதாவும், சரவணம்பட்டி 21வது வார்டு பகுதிகளில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக அந்த பகுதிகளில் சாலை வசதி, தெருவிளக்குகள், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவித்தார். மனு தாக்கலின் போது திமுக வட்ட கழக செயலாளர் வசந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், சோமசுந்தரம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க