• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

March 4, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களைவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு பணியில் ஈடுபட்டு வருகின்றன. திமுக இந்திய கம்யூனிஸ்ட் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையிலான குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது. தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் முத்தரசன்- மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன்,

திமுக-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னர் அறிவிப்பார். 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுகவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும் என்றார்.

மேலும் படிக்க