• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுகவின் முரசொலி விழாவில் கமல் ரஜினிக்கு அழைப்பு !

July 20, 2017 தண்டோரா குழு

சென்னையில் நடைபெறும் முரசொலி விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமலுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் பவளவிழாவை சிறப்பாகக் கொண்டாட அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. முரசொலி பவள விழா நிகழ்ச்சியானது, ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அதிமுக தவிர்த்த மற்ற கட்சிகளுக்கும், பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிக்கை நிறுவனங்களுக்கும்,நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரஜினி,கமல் இருவரும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராக பங்கேற்க உள்ளார்.முன்னணி நடிகர்கள் இருவரும் அரசியல் குறித்து பேசி வரும் நிலையில் அவர்களுக்கு திமுக நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க